கூலி படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்!
கூலி படத்திற்கான சென்சார் தகவல் அறிவிப்பு.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் டிரைலர் ஆக. 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அன்றிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவிடும் என்பதால் பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட முனைப்பு காட்டியுள்ளனர்.
Advertisement
Advertisement
கூலி திரைப்படம் 2.50 மணி நேரம் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்திற்கான புரமோஷன்களை வித்தியாசமான முறையில் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தணிக்கை வாரியம் கூலி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ’ஏ’ சான்றிதழ் பெற்ற படமாக கூலி உருவாகியுள்ளது. இறுதியாக, கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான சிவா திரைப்படம் ரஜினியின் ’ஏ’ சான்றிதழ் பெற்றப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 71-ஆவது தேசிய விருதுகள்: பார்க்கிங் - சிறந்த தமிழ் படம்!
Official information regarding the censoring of the film Coolie starring actor Rajinikanth has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.