செய்திகள்

ஏகே - 64 படத்தின் வில்லன் இவர்தானாம்!

அஜித் குமாரின் அடுத்த படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏகே - 64 ஆக உருவாகும் இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கான் முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாவும் நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

Reports suggest that director Mysskin will play the villain role against actor Ajith, and Sreeleela has been signed as the heroine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை!

வண்ணப் புறா... சாக்‌ஷி அகர்வால்!

தங்கப் பதுமை... அனுபமா பரமேஸ்வரன்!

அவசியம் என்றால் விஜய்யை கைது செய்வோம்: துரைமுருகன்

ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது?

SCROLL FOR NEXT