கூலி திரைப்படத்தின் கலை இயக்குநர் குறித்து லோகேஷ் கனகராஜ் பெருமிதமாகப் பதிவிட்டுள்ளார்.
கூலி படத்தில் வேலை பார்த்த ஒரு கலைஞர் குறித்து லோகேஷ் தினமும் பதிவிட்டு வருகிறார்.
இந்தப் படத்துக்கு கலை இயக்குநராக சதீஷ் குமார் பணியாற்றியுள்ளார். இவர் முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ படங்களுக்கும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இந்நிலையில், கலை இயக்குநர் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:
என்னுடைய முதல் படத்திலிருந்து கூலி படம் வரை, உன்னுடைய இதயத்திலிருந்து வேலை செய்திருக்கிறாய். முடிவில்லா நேரங்களிலிருந்து எல்லா பிரேம்களிலும் நாம் வேலை பார்த்திருக்கிறோம் சதீஷ் அண்ணா.
உங்களது அற்பணிப்பு, உறங்கா இரவுகள், என் மீதும் என் படங்கள் மீதும் எப்போதும் உண்மையான அக்கறையுடன் இருக்கிறீர்கள். திரையில் நாம் உருவாக்கிய உலகத்திற்கான உந்துசக்தியாக நீங்கள் இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
கூலி திரைப்படம் வருகிற ஆக.14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.