கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி சுந்தரம் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் நடிகர் எஸ்.வி. சேகர், ஷோபனா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மீனாட்சி சுந்தரம் தொடரில் நடிகை ஷோபனாவுக்கு ஜோடியாக எஸ்.வி. சேகர் நடிக்கிறார்.
தொடரின் கதையின்படி, 76 வயதான எஸ்.வி. சேகர், 26 வயது ஷோபனாவை திருமணம் செய்கிறார். கதைக்களம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்தத் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், மீனாட்சி சுந்தரம் தொடர் இந்த வார இறுதியில் வரும் ஆக. 23 ஆம் தேதி பரபரப்புக் காட்சிகளுடன் நிறைவடைகிறது.
மீனாட்சி சுந்தரம் தொடர் கடந்த ஏப்ரம் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், 4 மாதங்கள்கூட ஆகாத நிலையில், நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மறுஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பெறுகின்றனவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.