ரஜினி - கமல் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, கமல்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 திரைப்படத்தை இயக்கும் பணிகளை லோகேஷ் மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கூலி வெளியீட்டுக்கு முன்பே நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து நடிப்பதற்கான கதையைச் சொன்னாராம்.
கதை பிடித்துப்போக, ரஜினியும் கமலும் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கைதி -2 திரைப்படத்திற்கு முன்பே இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி இணைந்தால் 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கூலி வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
reports suggests director lokesh kanagaraj directs kamal haasan and rajinikanth movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.