நடிகர் பாலா நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. நகைச்சுவை நடிகரான இவர் சமூக வலைதளங்களில் மூலம் வறுமையிலுள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்தும் வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் பாலாவுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்.
தற்போது, இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பாலாவிடம், “சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயனின் இடத்தைப் பிடிப்பீர்களா?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு, பாலா, “சகோதரர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஆள். பெரிய உயரத்தில் இருக்கிறார். நான் இப்போதுதான் முதல் அடி வைக்கிறேன். மதராஸி வெளியாகும் அன்றே எங்கள் படமும் வெளியாகிறது. அந்தத் தேதியை நாங்கள் முடிவு செய்யவில்லை. ஓடிடி, திரையரங்க ஒதுக்கீடு உள்ளிட்டவைதான் காரணம். மதராஸி படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்கள் படத்திற்கு வந்தால் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பென்ஸ் படத்தில் ரவி மோகன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.