சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற செப்.5ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் 23-ஆவது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
அமரன் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால், இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில், படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம் 47 நிமிஷம் கொண்டதாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்ததால் குழந்தைகளும் சிறுவர்களும் அந்தப் படத்தைப் பார்க்க முடியவில்லை. மேலும் மோசமான விமர்சனங்களாலும் அதன் வசூல் பாதிக்கப்பட்டது.
மதராஸி திரைப்படம் கூலி படத்தினை விஞ்சுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், அதற்குச் சாதகமாக யு/ஏ சான்றிதழும் கிடைத்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.