நடிகர் மம்மூட்டி mammootty kampany
செய்திகள்

நான் கதை எழுதினால் ஏற்பீர்களா? மம்மூட்டியின் பதிலைக் கேட்டு அசந்த நெறியாளர்!

நடிகர் மம்மூட்டியின் பதில் ஒன்று வைரலாகி வருகிறது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மம்மூட்டி களம் காவல் திரைப்படத்திற்காக அளித்த நேர்காணல் பதில் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் மம்மூட்டி களம் காவல் என்கிற கிரைம் திரில்லர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், டிச. 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இதற்கான புரமோஷன் நேர்காணல் ஒன்றை மம்மூட்டி கொடுத்திருக்கிறார்.

கேள்விகளைக் கேட்ட பெண் நெறியாளர் இறுதியாக, “நீங்கள் எவ்வளவோ விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டீர்கள். நடிக்கவும் போகிறீர்கள். நான் உங்களுக்காக கதை எழுதிக்கொண்டு வந்தால் அதனை ஏற்பீர்களா?” எனக் கேட்டார்.

அதற்கு மம்மூட்டி, “கதை உருவாகும்போதும் அதனை எழுதும்போதும் என்னை மனதில் வைத்துக்கொண்டு எழுதக்கூடாது. அப்படி எழுதினால் அந்தக் கதாபாத்திரம் நானாகத்தான் இருப்பேன். கதாபாத்திரத்தை மட்டும் எழுதுங்கள்; அதனால்தான் இப்படியான கதைகளில் நான் இருந்திருக்கிறேன்” என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் நடிப்பு மீதான மம்மூட்டியின் தேடலைப் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT