பிரபு தேவாவின் மூன் வாக் வெளியீட்டு போஸ்டர்கள்!
மூன் வாக் திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள்...
நடிகர் பிரபுதேவா நடித்து வரும் மூன் வாக் படத்தின் வெளியீட்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில், பேட்ட ராப் படம் உருவாகிவரும் நிலையில், தற்போது புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கி வருகிறார்.
Advertisement
Advertisement
மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இரண்டு கதாநாயகிகளுடன் பிரபு தேவா நடிக்க, நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இத்திரைப்படம் 2026 கோடை வெளியீடாகத் திரைக்கு வருமென இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ரியோ ராஜ் - 6 பெயர் போஸ்டர்!
prabhu deva's moon walk new posters out
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.