கோவை: ஈஷா லிங்க பைரவியில் ‘பூதசுத்தி விவாஹ’ முறையில் நடிகை சமந்தா பிரபு, ராஜ் நிதிமோர் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நடிகை சமந்தா ருத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிதிமோர் ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று காலை பூதசுத்தி விவாஹ முறையில் நடைபெற்றது.
இந்தத் தனிப்பட்ட திருமண வைபவத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
லிங்க பைரவி சன்னதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹ’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது.
இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹம் வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும்,பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. மோகன். ஜி படத்திற்கு ஏன் பாடினீர்கள்? வருத்தம் தெரிவித்த சின்மயி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.