சமந்தா  
செய்திகள்

அரசனில் சமந்தா?

அரசனில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை...

இணையதளச் செய்திப் பிரிவு

சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகிறது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, சில நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்தனர்.

வடசென்னை உலகுடன் தொடர்புடைய கதையாக உருவானாலும் நடிகர் தனுஷ் சிறையிலிருக்கும்போது அரசனின் கதை நடக்கிறது. இதில், இடம்பெறும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்” எனத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசன் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாகவும் படத்தின் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

actor samantha might join arasan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு வாக்களிக்க 3 லட்சம் பேர் காத்திருப்பு: செங்கோட்டையன் | செய்திகள் : சில வரிகளில் | 24.01.2026

ஹிந்தியில் ரீமேக்காகும் தலைவர் தம்பி தலைமையில்!

அமெரிக்காவில் பனிப்புயல்: 8,000 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வை கைவிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மங்காத்தா முன் நிற்க முடியவில்லை: மோகன். ஜி வேதனை!

SCROLL FOR NEXT