சீரியல் நடிகர் அக்னி - ராதிகா திருமணம். படம்: இன்ஸ்டஸ்டாகிராம்
செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை நடிகர்!

சீரியல் நடிகர் அக்னி - ராதிகா திருமணம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

செம்பருத்தி, மலர் தொடரில் நாயகனாக நடித்து பிரபலமான நடிகர் அக்னி திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் ஆதி பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அக்னி.

முன்னதாக, கார்த்திக் ராஜ் 'செம்பருத்தி' தொடரில் நடித்திருந்த நிலையில், அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்கச் சென்றதால், அவருக்கு பதில் நடிகர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மலர் பாத்திரத்தில் நாயகனாக நடிகர் அக்னி நடித்தார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார்.

நடிகர் அக்னி தொகுப்பாளராக இருந்து சின்ன திரையில் அறிமுகமானவர் என்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சீரியல் நடிகர் அக்னி - ராதிகா திருமணம்.

இந்த நிலையில், நடிகர் அக்னி மற்றும் ராதிகாவுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

இவர் தன்னுடைய திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

Regarding the marriage of serial actor Agni and Radhiga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ஃபெராக்ரைலம்’ மருந்து விற்பனைக்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் 71 போ் வெளிநாடுகளில் தஞ்சம்

2-ஆவது ஆண்டாக இந்திய மாலுமிகள் கைவிடப்படுவது அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கூட்டமைப்பு

குடியரசு தலைவரின் தேநீா் விருந்து: தமிழக மருத்துவருக்கு அழைப்பு

SCROLL FOR NEXT