பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மறு வாய்ப்பாக நடிகை ஆதிரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
வெளியே இருந்து ஆட்டத்தை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தாலும், அவரின் ஆட்டத்தில் எந்தவித சுவாரசியமும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆதிரைக்கு பதிலாக நடிகர் பிரவீன்ராஜ் தேவசகாயத்திற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 வது நாளை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கு மேடை நடனக் கலைஞர் ரம்யா ஜோ கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த வாரத்தில் ஜமீன்தாரும் நெக்லஸும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் பிரபலமடைந்த பாத்திரத்தின் சாயலில் போட்டியாளர்கள் வேடமேற்றுள்ளனர்.
மூன்று நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் போட்டியாளர்கள் கதாபாத்திரமாகவே நடந்துகொள்ள வேண்டும். போட்டியாளர்களிடையே பொழுதுபோக்கு அம்சத்தை அதிகரிக்கும் வகையில் இப்போட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில் வாழ்வே மாயம் கமல்ஹாசன் பாத்திரத்தை ஆதிரை ஏற்றுள்ளார். பிக் பாஸ் போட்டியில் இருந்து 3வது வாரத்தில் ஆதிரை வெளியேற்றப்பட்டார். தற்போது 9 வது வாரத்தில் மறு வாய்ப்பாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வெளியே இருந்து 6 வாரங்களாக போட்டியைப் பார்த்துவிட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதால், இவரால் ஆட்டத்தில் பல திருப்புமுனைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இசைக் கலைஞர் எஃப்.ஜே., உடனான உறவு சிக்கல் குறித்து மட்டுமே பேசி வருகிறார்.
மற்ற போட்டியாளர்களின் ஆட்டத்தை எந்தவகையிலும் ஆதிரையின் வருகை பாதிக்கவில்லை என்பதால், இவருக்கு பதிலாக பிரவீன்ராஜ் தேவசகாயத்திற்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மிகுந்த உற்சாகத்துடன் பிக் பாஸ் போட்டிகளில் பங்கேற்று, தனது நடிப்புத் திறமையையும் பிரவீன்ராஜ் வெளிப்படுத்தி வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ்! பாராட்டுகளைப் பெற்ற ப்ரஜின், கானா வினோத்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.