ஏ. ஆர். ரஹ்மான் 
செய்திகள்

மூன் வாக் - 5 பாடல்களையும் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்!

மூன் வாக் படத்திற்காகப் 5 பாடல்களைப் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்...

இணையதளச் செய்திப் பிரிவு

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் முதல்முறையாக ஒரு திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் பாடியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில், பேட்ட ராப் படம் உருவாகிவரும் நிலையில், தற்போது புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கி வருகிறார்.

மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு கதாநாயகிகளுடன் பிரபு தேவா நடிக்க, நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது.

இத்திரைப்படம் 2026 கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களையும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானே பாடியுள்ளதாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

அதிகபட்சம் ஒரு திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடிவந்த ரஹ்மான், முதல் முறையாக அனைத்து பாடல்களையும் பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ar rahman sungs 5 songs in moon walk movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகன் வருமா? வராதா?

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.பி. தர்மர்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து; ஐசிசி அறிவிப்பு!

விஜய்க்கு வாக்களிக்க 3 லட்சம் பேர் காத்திருப்பு: செங்கோட்டையன் | செய்திகள் : சில வரிகளில் | 24.01.2026

ஹிந்தியில் ரீமேக்காகும் தலைவர் தம்பி தலைமையில்!

SCROLL FOR NEXT