கல்கி ஏடி 2898 திரைப்படத்தின் புதிய கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஆண்டு ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
மேலும், ரூ. 1000 கோடி வரை வசூலித்து வணிக ரீதியிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதில், முன்னணி கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், பிரபாஸ்ம் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தொடர்ந்து, கல்கி - 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள தீபிகா படுகோன் பல நிபந்தனைகளை விதித்ததால் அவரைத் தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கியது.
இந்த நிலையில், தீபிகா படுகோன் நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவைத் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.