இயக்குநர் சிவா இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜித் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏகே - 64 பணிகளிலும் கவனம் செலுத்துகிறார்.
தற்போது, மலேசியாவில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் சிவா மலேசியாவில் கடந்த சில நாள்களாக அஜித்துடன் நேரம் செலவழித்து வருகிறார். கங்குவா தோல்விக்குப் பின் சிவா எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார்.
இதனால், இந்தச் சந்திப்பிற்குக் காரணம் மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதித்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.