அய்யனார் துணை தொடரிலிருந்து... இன்ஸ்டாகிராம்
செய்திகள்

தொடர் முன்னேற்றத்தில் அய்யனார் துணை சீரியல்! இந்த வார டிஆர்பி!

இந்த வார டிஆர்பி விவரம் தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

டிஆர்பியில் அய்யனார் துணை சீரியல் தொடர்ந்து முன்னேறி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அய்யனார் துணை சீரியல் டிஆர்பியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வழக்கம்போலவே, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே, டிஆர்பியில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்தத் தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்தவகையில், தொடர்களின் இந்த வாரத்தின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர் 9.65 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சிங்கப்பெண்ணே தொடர் 9.19 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. கயல் தொடர் 9.09 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், மருமகள் தொடர் 8.55 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.

எதிர்நீச்சல் தொடர் 8.44 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடர் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் ஆகிய தொடர்கள் 8.41 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளன.

சிறகடிக்க ஆசை தொடர் 8.38 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 7.62 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று எட்டாம் இடத்தையும்,அனுமன் தொடர் 7.52 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தையும் சின்ன மருமகள் தொடர் 7.22 புள்ளிகளைப் பெற்று பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

This week's TRP details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும்! - விமானப் போக்குவரத்து அமைச்சகம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: பறிமுதல் வாகனங்கள் டிச.22, 23இல் பொது ஏலம்

மாணவர்கள் கவனத்துக்கு.. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்!

எடப்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!

பிக் பாஸ் 9: அரோரா காலில் விழுந்த கமருதீன்... தொடரும் வாக்குவாதம்!

SCROLL FOR NEXT