மதுரையில் தொடங்கும் அரசன் படப்பிடிப்பு..! சிம்பு பேட்டி!
வெற்றி மாறன் இயக்கும் அரசன் படம் குறித்து சிம்பு பேசியதாவது...
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் அரசன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்குவதாக சிம்பு கூறியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகவுள்ளது
நடிகர் சிம்பரசன் நாயகனாகவும் வடசென்னையில் நடித்தவர்களில் சிலரும் நடிக்கவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி படத்தில் இணைந்ததாக சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மலேசியாவில் கடை திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த சிம்பு பேசியதாவது:
வரும் டிச.9ஆம் தேதி மதுரையில் அரசன் படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள,இங்கிருந்து நான் நேரடியாக மதுரைக்குச் செல்கிறேன் என்றார்.
Simbu has announced that the shooting of Arasan, directed by Vetri Maran, will begin in Madurai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.