நடிகர் மம்மூட்டி களம்காவல் படத்துக்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பிற்கு நடிகர் விநாயகன் உடன் இணைந்து விடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ரசிகர்களுக்கும் சேர்த்து நன்றி தெரிவித்துள்ளார்.
3 நாளில் ரூ.44.15 கோடி!
அறிமுக இயக்குநர் ஜிதின் கே.ஜோஷ் இயக்கத்தில் கடந்த டிச.5ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது.
இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், இதில் பல நடிகைகள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. மூன்று நாளில் ரூ.44.15 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், மம்மூட்டி மலையாளத்திலேயே பேசியபடி விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
களம்காவல் வெற்றிக்கு மம்மூட்டி நெகிழ்ச்சி...
வணக்கம். நாங்கள் ( விநாயகனைக் குறிப்பிடுகிறார்) இருவரும் நடித்த களம்காவல் படத்தினை மிகப்பெரிய வெற்றிபெற செய்த அனைவருக்கு நன்றி கூறவே இங்கு வந்திருக்கிறோம்.
புதிய திறமைசாலிகள் பலருடன் சில அனுபவமிக்க கலைஞர்களின் கடின உழைப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
ரசிகர்களுக்கு நன்றி. குறிப்பாக, குடும்ப ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. வரவேற்பை அளிக்கும் சமூக வலைதளம், ஊடகங்களுக்கும் நன்றி.
வருங்காலத்திலும் இதேபோல் நல்ல படங்களையேத் தருவோம். அன்புடன் மம்மூட்டி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.