அகண்டா - 2 போஸ்டர் 
செய்திகள்

அகண்டா - 2 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 வெளியீடு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான அகண்டா - 2 திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அகண்டா 2: தாண்டவம் திரைப்படம் கடந்த டிச. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக மற்றொரு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் காரணமாக குறிப்பிட்ட நாளில் படத்தை வெளியிட முடியவில்லை.

இதனால், இப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த பாலய்யா ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டியதாக தெரிகின்றது. இந்த நிலையில், புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அகண்டா - 2 திரைப்படம் வருகின்ற டிச. 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக டிச. 11 ஆம் தேதி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Akanda - 2 release date announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ஃபெராக்ரைலம்’ மருந்து விற்பனைக்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் 71 போ் வெளிநாடுகளில் தஞ்சம்

2-ஆவது ஆண்டாக இந்திய மாலுமிகள் கைவிடப்படுவது அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கூட்டமைப்பு

குடியரசு தலைவரின் தேநீா் விருந்து: தமிழக மருத்துவருக்கு அழைப்பு

SCROLL FOR NEXT