நடிகர்கள் கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘ஆரோமலே’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் நடிகர் கிஷன் தாஸ் மற்றும் யூடியூபர் ஹர்ஷத் கான் நடிப்பில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் ’ஆரோமலே’. இப்படத்துக்கு, சித்து குமார் இசையமைத்துள்ளார்.
மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் விடிவி கணேஷ், மேகா ஆகாஷ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம், கடந்த நவம்பர் 7 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், ‘ஆரோமலே’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.