மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசனின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. நடிகர் கார்த்திக் குமார் வருகை, தொடரின் பல திருப்புமுனைகள் போன்றவைகளால் இரண்டாம் பாகமும் வெற்றியடைந்தது.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் அடுத்தாண்டு 2026-ல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் அறிவிப்பு விடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தத் தொடரில் முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
தீபா பாலு கோமா நிலைக்கு சென்றதுடன், ஹார்ட் பீட் - 2வது சீசன் நிறைவடைந்தது. இதற்குப் பிறகான கதை எப்படி இருக்கும் என்று, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் முன்னோட்டக் காட்சி, வெளியீட்டுத் தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.