ரவி மோகனின் கராத்தே பாபு படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்!
நடிகர் ரவி மோகனின் “கராத்தே பாபு” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது குறித்து...
நடிகர் ரவி மோகனின் “கராத்தே பாபு” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.
”டாடா” திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு மற்றும் நடிகர் ரவி மோகன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் “கராத்தே பாபு”.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கும், அரசியல் கதைகளத்துடன் கூடிய இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Advertisement
Advertisement
இந்தத் திரைப்படத்தில், நடிகர்கள் நாசர், சக்தி வாசுதேவன், விடிவி கணேஷ் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக, இன்று (டிச. 11) சிறப்பு விடியோ வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஹார்ட் பீட் நடிகர்கள் நடிக்கும் புதிய இணையத் தொடர்!
The dubbing work for actor Ravi Mohan's film "Karate Babu" has begun.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.