நடிகர் ரஜினிகாந்த்தின் செயல் குறித்து ஷாருக்கான் பகிர்ந்த பழைய பேச்சு கவனம் பெற்றுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், தலைவர், சூப்பர் ஸ்டார் என எந்தப் பெயரில் அழைத்தாலும் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று தன் 75-வது பிறந்த நாளை ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் சுறுசுறுப்பாகவே கேக் வெட்டி கொண்டாடினார் ரஜினி.
வயதில் 75, சினிமாவில் 50 ஆண்டுகள் என வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இந்த பிறந்த நாளுக்கும் பல பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் 2014 ஆம் ஆண்டு கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசும்போது, “நான் பார்த்ததிலேயே மிகவும் கனிவான, இனிமையான ஸ்டார் இவர்தான். பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஒரு படப்பிடிப்பில் ரஜினி சாரை தூரத்திலிருந்து பார்த்தேன். அவர் ஒரு கண்ணாடி முன் நின்றுகொண்டு சிகரெட்டை கையிலிருந்து வாய்க்கு தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டிருந்தார்.
குறைந்தது, 45 நிமிடங்களாவது அதைச் செய்திருப்பார். ஒவ்வொரு முறையும் சரியாகவே சிகரெட்டை பிடித்தார். ஆனால், முயற்சிகள் நடந்துகொண்டே இருந்தன. திறமையும் வெற்றியும் தொடர் முயற்சிகளால் வரக்கூடியது என அன்று நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்றது கவனம் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: ரஜினி செய்யாத தவறு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.