பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகின்றார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான நடிகர் விஜய்யின் “துப்பாக்கி” மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் “மதராஸி” ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜம்வால்.
களரி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற நடிகர் வித்யூத் ஜம்வாலின், ஆக்ஷன் காட்சிகளுக்காகவே அவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த நிலையில், “ஸ்டிரீட் ஃபைட்டர்” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் வித்யூத் ஜம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதை சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு இன்று (டிச. 12) உறுதி செய்துள்ளது.
முன்னதாக, ஸ்டிரீட் ஃபைட்டர் திரைப்படத்தில் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ் “அகுமா” எனும் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹவுஸ்ஃபுல்... படையப்பா மறுவெளியீட்டைக் கொண்டாடும் ரசிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.