இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
கும்கி படத்தின் 13 ஆண்டுகள் நிறைவு முன்னிட்டு அவர் தனது குரலில் பாடிய பாடலை பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தினை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். நடிகை லக்ஷ்மி மேனனும் இந்தப் படத்தில்தான் அறிமுகமாகி இருந்தார்.
இந்தப் படத்தின் பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. டிச.14, 2012-இல் வெளியான இந்தப் படம் தற்போது 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி மோசமான விமர்சனங்களைச் சந்தித்தது.
இந்நிலையில், இசையமப்பாளர் டி. இமான் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கும்கியின் 13 ஆண்டுகள். இப்போதும் இந்தப் படத்தின் ’ஒன்னும் புரியல’ பாடலைக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகிறது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் துணிக்கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு பணிபுரியும் ஊழியர்களும் பொதுமக்களும் இந்தப் பாடலை பாட வேண்டுமென மிகுந்த அன்புடன் கேட்டார்கள்.
அவர்கள் கேட்டதை தவிர்க்க முடியவில்லை. இந்த மாதிரியான தருணங்கள்தான் இசை என்பது எவ்வளவு ஆசீர்வாதம் என்பது நினைவூட்டுகிறது. கடவுளுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.