செய்திகள்

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

துரந்தர் வசூல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் வசூலில் அசத்தி வருகிறது.

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்‌ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர்.

பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம் பல உண்மைச் சம்பங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, படம் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெறுவது போன்ற காட்சிகளும் 3.30 மணிநேரம் அளவுகொண்ட திரைப்படத்தில் பெரிய தொய்வாக அமையாதது படத்திற்கு பலமாக அமைந்திருந்தது. இருந்தும், வசூலில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக வில்லனாக நடித்த அக்‌ஷய் கன்னாவின் நடன ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலானதால் இப்படத்திற்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டன.

இதனால், இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் வசூலில் மிகப்பெரிய மாற்ற ஏற்பட்டதுடன் இதுவரை உலகளவில் ரூ. 552.70 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார முடிவிற்குள் ரூ. 750 கோடியை நெருங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

dhurandhar movie collected rs. 550 crores in worldwide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் விளக்கு பூஜை! திரளானோர் பங்கேற்பு!

ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்

SCROLL FOR NEXT