இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!
29 படப்பிடிப்பு குறித்து...
இயக்குநர் ரத்னகுமாரின் 29 என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகிறது.
இப்படத்தின் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
Advertisement
Advertisement
இப்படத்திற்கு 29 எனப் பெயரிட்டுள்ளனர். டீசர் காட்சிகளைப் பார்க்கும்போது 29 வயது ஆணின் வாழ்க்கையும், காதலுமாக இப்படத்தின் கதை இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் படப்பிடிப்பு முடிய உள்ளதாகவும் மார்ச் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் ஹோம்பவுண்ட்!