செய்திகள்

ஜன நாயகன் பட 2வது பாடல் முன்னோட்ட விடியோ!

வெளியான ஜன நாயகன் பட 2வது பாடலின் முன்னோட்ட விடியோ.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் 2வது பாடலின் முன்னோட்ட விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலரை புத்தாண்டு அன்று (ஜன. 1) வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்ப்படத்தின் முதல் பாடலான ’தளபதி கச்சேரி’ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதிய இப்பாடலை நடிகர் விஜய், அனிருத், அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.

இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் 2வது பாடலான ’ஒரே பேரே வரலாறு’ பாடலின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பாடலின் முழு விடியோ நாளை(டிச. 18) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The teaser video for the second song from the film 'Jananayagan' is out!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் எலான் மஸ்க்! 600 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதல் நபர்!

"அண்ணாமலை பற்றி பதில்சொல்ல நேரமில்லை!" செங்கோட்டையன் பேட்டி

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

குடியரசு துணைத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்திப்பு!

மடிக்கணினி இறக்குமதி கோருவதற்கான இணையதளம் டிசம்பர் 22ல் திறப்பு!

SCROLL FOR NEXT