ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் (கோப்புப் படம்) AP
செய்திகள்

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் இயக்கத்தில் “டிஸ்கிளோஷர் டே” எனும் புதிய சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகின்றது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான பாராமௌண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில், ஹாலிவுட் நடிகை எமிலி பிளண்ட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு அறிவியல் (சயின்ஸ் பிக்‌ஷன்) திரைப்படமான டிஸ்கிளோஷர் டேவின் டீசரை படக்குழுவினர் செவ்வாய்க்கிழமை (டிச. 16) வெளியிட்டுள்ளனர்.

ஜுராசிக் பார்க், இண்டியானா ஜோன்ஸ் போன்ற திரைப்படங்களின் இயக்குநர் ஸ்டீவ ஸ்பீல்பர்க் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டேவிட் கோயப் கூட்டணி மீண்டும் டிஸ்கிளோஷர் டே படத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப் புதிய படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜன நாயகன் பட 2வது பாடல் முன்னோட்ட விடியோ!

The teaser for the new film directed by renowned Hollywood director Steven Spielberg has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

முட்டை விலை ரூ. 6.25 ஆக நீடிப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி வரவேற்பு

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா உயரிய விருது - புகைப்படங்கள்

லக்னௌவில் பனிமூட்டம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ரத்து!

SCROLL FOR NEXT