சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!
சிவகார்த்திகேயன், அதர்வா கதாபாத்திரம் குறித்து...
பராசக்தி திரைப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா சகோதரர்களாக நடித்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பராசக்தி. இப்படம் மொழித்திணிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
மேலும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் அன்றைய அரசியலை மையப்படுத்தியும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இத்திரைப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயனும் அதர்வாவும் சகோதரர்களாக நடித்துள்ளதாக இயக்குநர் சுதா கொங்காரா தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் அண்ணன் சிவகார்த்திகேயன் அரசு பணியில் இருப்பவராகவும் தம்பி அதர்வா பொறியியல் மாணவராகவும் இருந்தாலும் இருவருக்கும் சித்தாந்த முரண்பாடுகள் இருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிக்க: உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!