நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய சினிமா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாலிவுட் பட உலகில் ராதிகா ஆப்தேவின் படங்களுக்கும் கருத்துகளுக்கும் தனி ரசிகர்களே உண்டு.
பெண்ணியம் மற்றும் அரசியல் பார்வைகளைக் குறித்து அதிரடியாக பேசுபவர். மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடித்த சிஸ்டர் மிட்நைட் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ராதிகா ஆப்தே, “தென்னிந்திய சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், நான் பணியாற்றிய சில படங்களின் படப்பிடிப்பின்போது என் மார்பகங்கள் மற்றும் பின்புறம் எடுப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பேட்களை (pad) வைக்கச் சொல்லி நிர்பந்திக்கப்பட்டேன். அது எனக்கு மிகவும் அசௌகரியமான அனுபவமாக இருந்தது.
மேலும், “அதிக பேட்களை வைங்க” என்பார்கள். எனக்கு, ‘வீட்டிலிருக்கும் உங்கள் அம்மா, சகோதரிகளிடம் இப்படி பேட் வைக்கச் சொல்வீர்களா?’ எனக் கேட்கத் தோன்றும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.