FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

தனுஷ் 54 படத்தின் படப்பிடிப்பு குறித்து...

Updated On : 21 டிசம்பர் 2025, 10:04 am IST
படப்பிடிப்பை முடித்த டி54 படக்குழுவினர். - படம்: எக்ஸ் / தனுஷ் டிரெண்ட்ஸ்.
பகிர்:

நடிகர் தனுஷின் 54ஆவது படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழு கேக் வெட்டி இதனைக் கொண்டாடியுள்ளது. இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த ஜூலை 10ஆம் தேதி நடிகர் தனுஷ் - விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

Advertisement

Advertisement

நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த தேரே இஷ்க் மே தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஹிந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.

தற்போது, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

The film crew has announced that the entire shooting of actor Dhanush's 54th film has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments