தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி 
செய்திகள்

தனுஷ் - 55 புதிய அறிவிப்பு!

தனுஷ் - 55 பட அப்டேட் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷ் - 55 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தனுஷின் 55ஆவது படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தைக் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பதாக அறிவிக்கவும்பட்டது. அதற்கான, பூஜை புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே இட்லி கடை, தேரே இஷ்க் மே, கர ஆகிய படங்களில் தனுஷ் நடித்து முடித்தார். இதில் இரண்டு திரைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றன.

இதற்கிடையே, தனுஷ் - 55 திரைப்படத்திலிருந்து கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் விலகினார். படத்தின் பட்ஜெட் அதிகரிப்பே இதற்குக் காரணம் எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

dhanush 55 movie produced by wounderbar films

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போர் முடிவுக்கு புதினுடன் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு

மூடப்படாத ரயில்வே கேட்! லாரி மீது ரயில் மோதி விபத்து! நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தவிர்ப்பு!

சிறை முதல் ரெட்ட தலை வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

"உதயநிதி மீது FIR போடணும்! திமுக ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா?": அண்ணாமலை பேட்டி | BJP | DMK

2025 - 2026 ஜனவரியில் தங்கம், வெள்ளி விலை இவ்வளவு உயர்வா? போட்டியில் சிக்கனும் முட்டையும்கூட..

SCROLL FOR NEXT