பிரபல தொடர் நடிகர் சுதர்சனம் - ஸ்வேதா ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.
சினிமா, இணையத் தொடர், சின்ன திரை தொடர்கள் என அனைத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வழங்கி பிரபலமானவர் நடிகர் சுதர்சனம்.
தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த சுதர்சனம், சின்ன திரையில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரில் நடித்து பிரபலமானார்.
இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீனாட்சி பொண்ணுங்க, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட தொடர்களிலும் விஜய் தொலைக்காட்சியில் வேலைக்காரன், சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட தொடர்களிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஞ்சனி தொடரிலும் நடித்து ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்தார்.
மேலும், இன்ஸ்பெக்டர் ரிஷி இணையத் தொடரிலும் முக்கிய வேடத்தில் சுதர்சனம் நடித்துள்ளார். தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் தொடரில் கேசவன் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சுதர்சனத்திற்கும், ஸ்வேதா என்பவருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. உற்றார் உறவினர் முன்னிலையில் எளிமையான முறையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இது குறித்து நடிகர் சுதர்சனம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, விடியோ, புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். சுதர்சனம் - ஸ்வேதா ஜோடிக்கு வெள்ளித்திரை, சின்ன திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.