கென் கருணாஸ்... படம்: எக்ஸ் / பார்வதா என்டர்டெயின்மென்ட்
செய்திகள்

60 நாள்களில் படப்பிடிப்பை முடித்த கென் கருணாஸ்!

கென் கருணாஸ் இயக்கிய அவரது முதல் படத்தின் படப்பிடிப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கிவந்த முதல் படம் தற்போதை நிறைவடைந்துள்ளது.

அவரே நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் இணைந்தார்.

அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ்.

இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து விடுதலை - 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்றார்.

தானே இயக்கி நடிக்கும் இந்தப் படத்தினை பார்வதா என்டர்டெயின்மென்ட் கருப்பையா தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விரைவி முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல் வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய இரும்பு வியாபாரி அடித்து கொலை: தாய், மகன், மகள் கைது

அரசு நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் வெளியுறவு அமைச்சரின் மனைவி மீது குற்றப் பத்திரிகை: கவனத்தில் எடுத்துக் கொண்ட உ.பி. நீதிமன்றம்

மாமியாரை எரித்துக் கொன்ற மருமகன்!

கல்லூரி மாணவி மாயம்!

நாட்டில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு- மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா

SCROLL FOR NEXT