செய்திகள்

விஜய் குரலில்..! ஜன நாயகனின் செல்ல மகளே பாடல்!

ஜன நாயகன் திரைப்படத்தின் “செல்ல மகளே” பாடல் வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் “செல்ல மகளே” எனும் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகின்றது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால், அவர் நாயகனாக நடிக்கும் கடைசி திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ படத்தில் நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் “தளபதி கச்சேரி” மற்றும் “ஒரு பேரே வரலாறு” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், “ஜன நாயகன்” படத்தின் 3 ஆவது பாடலான “செல்ல மகளே” எனும் பாடல் இன்று (டிச. 26) வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இத்துடன், ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (டிச. 27) மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பராசக்தியில் சூர்யா ஏன் நடிக்கவில்லை? சுதா கொங்கரா விளக்கம்!

The song "Chella Magale" from actor Vijay's film 'Jana nayagan' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரியில் பாதுகாப்புப் பணியில் 1,000 காவலர்கள்!

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்... லோகேஷ் கனகராஜ்!

விஜய் ஹசாரே கோப்பை: ஃபீல்டிங்கின்போது இளம் வீரருக்கு காயம்; மருத்துவமனையில் அனுமதி!

சிறந்த திரைப்படங்கள் - 2025

ரூ. 1,000 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு, மக்களுக்காக விஜய்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT