பராசக்தியில் சூர்யா ஏன் நடிக்கவில்லை? சுதா கொங்கரா விளக்கம்!
பராசக்தியிலிருந்து சூர்யா விலகியது குறித்து...
இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழ் மொழிக்கு எதிரான மொழித்திணிப்பைக் கேள்விகேட்கும் கதையாக உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கராவின் முந்தைய படங்கள் கொடுத்த நம்பிக்கையை இப்படம் கொடுத்திருப்பதால் வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் நேர்காணலில் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, “நடிகர் சூர்யா பராசக்தியில் நடிக்க இருந்தார். ஆனால், அவர் படத்திலிருந்து விலகியதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், அவருக்கான படப்பிடிப்பு நாள்கள் சாதகமாக இல்லாதது முக்கிய காரணம்.
பராசக்தி போன்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சாக நடத்தி முடிக்க வேண்டும். இடையில் நின்றால், பொருள்செலவு அதிகமாகும். சூர்யா இல்லையென்றானதும் நடிகர் சிவகார்த்திகேயன் தாமாகவே முன் வந்து பராசக்தியில் இணைந்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.