ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை இயக்குநர் அட்லீ பாராட்டிப் பேசினார்.
மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அட்லீ பேசுகையில் "என்னுடைய அண்ணன், என்னுடைய தளபதி விஜய், உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர். நான் உதவி இயக்குநராக இருந்தபோதே, என்னை அழைத்து, என்னுடைய கடின உழைப்பை அவர் பாராட்டினார்.
உங்களிடம் கதை ஏதேனும் இருந்தால், சொல்லுங்கள் என்றும் சொன்னார். அந்த சமயத்தில் அவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
திரையுலகில் மைல்கல்லை எட்டிய எந்தவொரு முன்னணி நடிகரும் இதுபோல செய்ய மாட்டார்கள். அவர் உண்மையிலேயே நல்ல மனிதர்.
நம் வாழ்க்கையில் 3 விதமான மனிதர்களை நாம் சந்திப்போம். சிலர் இலைகளைப் போன்றவர்கள் - வருவார்கள்; தேவை முடிந்ததும் சென்று விடுவார்கள். சிலர் கிளைகளைப் போன்றவர்கள் - அவர்கள் இருப்பார்கள்; புயல் ஏதேனும் வந்தால் கீழே விழுந்து விடுவார்கள். ஆனால், வேர்களைப் போன்று உங்களுடன் நிற்பவர்கள் - என்றும் உங்களைவிட்டுப் பிரிய மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.