நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து காதல் திரைப்படம் ஒன்றை விரும்புவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் ஜன. 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மொழித் திணிப்பு அரசியலுக்கு எதிரான மாணவர்களின் எழுச்சியாக இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இதில், செழியன் என்கிற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா, “எனக்கு காதல் கதைகள் மீது அதிகம் விருப்பம் உண்டு. நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து முதல் மரியாதை போன்ற திரைப்படம் ஒன்றை இயக்க ஆசைப்படுகிறேன்.
இது என் நீண்ட நாள் விருப்பம். இதற்கான கதையும் இருக்கிறது. ஆனால், முழுமையான வடிவம் இல்லை. அதேநேரம், களைப்பாகவும் உணர்வதால் நான் விரைவிலேயே சினிமாவிலிருந்து ஓய்வு பெறவும் விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.