நடிகர் ரஜினிகாந்த்  
செய்திகள்

ரஜினியை இயக்கும் இளம் இயக்குநர்?

ரஜினி - 173 திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய திரைப்பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த சில நாள்களிலேயே கனத்த இதயத்துடன் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார். திடீர் அதிர்ச்சியாக இது அமைந்தது.

இதனால், தலைவர் 173 திரைப்படத்தின் இயக்குநர் யார் என்கிற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் ரஜினிக்கு சொன்ன கதை அவருக்குப் பிடித்ததால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்தக் கூட்டணிக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.89.84 ஆக நிறைவு!

நடிகர் மோகன் லாலின் தாயார் காலமானார்

ரியான் கூக்லர் பகிர்ந்த பிளாக் பாந்தர் 2 படத்தின் அசலான கதை!

மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்கள்!

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT