நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து தங்களது இல்லற வாழ்வைத் தொடங்க கிட்டத்தட்ட தேதி குறிக்கப்பட்டுவிட்டது.
இருவரும் காதலிக்கிறார்கள் என்பது வெறும் புரளியாக இருந்து வந்த நிலையில், அது பற்றி கடைசி வரை இருவருமே பொது வெளியில் வாய் திறக்கவில்லை.
ஆனால், ஒருபக்கம், ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் தங்களது நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து நிச்சயதார்த்தத்தை மிக எளிமையான முறையில் நடத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது இதுநாள்வரை வெறும் தகவலாகவே இருக்கிறது. இருவருமே நிச்சயதார்த்தம் குறித்து புகைப்படமோ, பதிவோ தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இதுவரை ரகசியம் காக்கப்படுகிறது.
அவர்களது ரசிகர்களோ, இருவருக்கும் திருமணம் எப்போது என்று அறிய ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல, இருவருக்கும் திருமண தேதி நெருங்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.
திரை நட்சத்திரங்களான இருவரும் வரும் 2026 பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் திருமணம் உதைப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெறவிருப்பதாகவும், இரு வீட்டாரும் திருமணத்துக்கு இந்த இடத்தை முடிவு செய்திரப்பதாகவும் கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம் போலவே, திருமணமும் மிக எளிமையாக உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைத்து நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பிறகு, திரைப் பிரபலங்களுக்கு ஹைதராபாத்தில் இருவரும் சேர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவார்களா இல்லையா என்பது மட்டும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி இருவருக்கும் மிக ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்றாலும் இது பற்றி வெளி உலகுக்கு தெரியாமல் ரகசியம் காக்கப்பட்டது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா இருவருமே தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து இதுவரை எதையும் வெளிப்படையாக அறிவித்தது இல்லை. இருவரும் கீதா கோவிந்தம் படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அடுத்தடுத்து படங்களில் இணைந்து நடித்தபோது நட்பு காதலாகி மாறி, 2026-ல் திருமணமாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.