அர்ஜித், ஷங்கர் 
செய்திகள்

ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநரான ஷங்கர் மகன்!

ஷங்கர் மகன் உதவி இயக்குநராகியுள்ளார்...

DIN

இயக்குநர் ஷங்கரின் மகன் ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த்த வணிக வெற்றியையும் நல்ல விமர்சனங்களையும் பெறாதாது ஷங்கருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

அடுத்ததாக, இந்தியன் - 3 திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து, ஷங்கர் வேள்பாரி நாவலை இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் ஷங்கர் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டுள்ளார்.

ஏ. ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் மதராஸி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதை படத்தின் போஸ்ட்ரை வெளியிட்டு அர்ஜித் உறுதி செய்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகன்கள் நடிப்பைத் தேர்ந்தெடுக்காமல் இயக்குநர் பாதையைத் தேர்ந்தெடுத்தது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT