செய்திகள்

எஸ்கே பிறந்தநாள்... பராசக்தி மேக்கிங் விடியோ வெளியிட்டு சுதா கொங்கரா வாழ்த்து!

பராசக்தி மேக்கிங் விடியோவை வெளியிட்ட சுதா கொங்கரா.

DIN

பராசக்தி திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அந்தப் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் பராசக்தி படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படத்தின் போஸ்டரில் சிவகார்த்திகேயனின் தோற்றம் பெரிதும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும், தமிழ் தீ பரவட்டும் என்கிற வாசகத்துடன் வெளியான போஸ்டர் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்தநாளை (பிப். 17) முன்னிட்டு பராசக்தி படத்தின் மேக்கிங் விடியோவை வெளியிட்டு இயக்குநர் சுதா கொங்கரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’மதராஸி’ திரைப்படத்தின் டைட்டில் டீசருமின்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயனுக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT