செய்திகள்

குட் பேட் அக்லி டீசர் வெளியீடு எப்போது?

நடிகர் அஜித் குமாரின் ’குட் பேட் அக்லி டீசர்’ வெளியீடு குறித்து...

DIN

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் பட வெளியீட்டை குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது.

ஆனால், விடாமுயற்சியும் பொங்கலுக்கு வெளியாகாமல் பிப். 6 அன்று வெளியானது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இந்தப் படத்தில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார்.

கதையாக விடாமுயற்சி நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
மேலும், அஜித்தின் முந்தைய படங்களின் வசூலைக் கூட விடாமுயற்சி வசூலிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் முன்னதாக இயக்கிய ’மார்க் ஆண்டனி’ படம் பெரிய வெற்றி பெற்றதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம்.

குட் பேட் அக்லி திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், அஜித் நடிக்கவேண்டிய பகுதிகள் முடிந்து அவர் இல்லாத சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட் பேட் அக்லி வருகிற ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் முன்னரே அறிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புல்லட் பேபி.. கீர்த்தி ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்!

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

SCROLL FOR NEXT