கெட்டி மேளம் தொடரில் ஷாலியின் காட்சி... 
செய்திகள்

புதிய தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி ஷாலியின் புதிய தொடர் தொடர்பாக..

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி ஷாலினி கெட்டி மேளம் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் ராஜி பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி. இவர் கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, அதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இத்தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் ஷாலினி. இவருக்கு சமூக ஊடகங்களிலும் ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் தொடரில், இவர் நடிக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இத்தொடரின் கதைகளத்தில் வெற்றி பாத்திரத்தில் நடிக்கும் சிபு சூர்யனுக்கு பெண் பார்க்கும்போது ஷாலினியின் புகைப்படம் நேற்றைய ஒளிபரப்பான எபிசோடில் காண்பிக்கப்பட்டது.

இதன் மூலம் கெட்டி மேளம் தொடரில் ஷாலினி சிறப்புத் தோற்றத்தில் நடக்கிறாரா என்று சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், கெட்டி கேளம் தொடரில் நடிப்பதாக ஷாலினி தரப்பில் இருந்து எவ்விதமான உறுதிபடுத்தப்பட்ட தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT