செய்திகள்

ரவி மோகனைத் தொடர்ந்து பெயரை மாற்றிய நடிகர்!

நடிகர் கெளதம் கார்த்திக்கின் பெயர் மாற்றம்.

DIN

நடிகர் கெளதம் கார்த்திக் தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார்.

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக், மணிரத்தனம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, பத்துதல உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் ஆர்யாவுடன் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அறிவிப்பு போஸ்டரில் இவரின் பெயர் கெளதம் ராம் கார்த்திக் என இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கெளதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டுள்ளார்.

பெரும்பாலும் சினிமாவில் திருப்புமுனை ஏற்படும் என்பதற்காக தங்களது பெயரை மாற்றுக்கொள்வது உண்டு.

அந்த வகையில், "ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் யாரும் என்னை அழைக்க வேண்டாம்" என்று ரவி மோகன் முன்னதாக கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், கெளதம் கார்த்திக் தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

பிக் பாஸ் 9: நீ ஹீரோடா! வெளியே வந்ததும் கமருதீனிடம் பேசிய கானா வினோத்!

ஜன. 26 முதல்.. இந்திய சந்தையில் மீண்டும் ரெனால்ட் டஸ்டர்!

SCROLL FOR NEXT