மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் வெளியீட்டுத் தேதி!
டோமினிக் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
நடிகர் மம்மூட்டி நடித்த டோமினிக் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இதையும் படிக்க: விடாமுயற்சி விலகல்... பொங்கல் வெளியீட்டை அறிவித்த சிறிய படங்கள்!
இதில், கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் நடித்துள்ளனர். துப்பறியும் காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி நடித்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரக்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்பட்டுள்ளது.