அன்ஷிதா படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8 வெற்றியாளர் பெயரைக் கூறிய அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு நடிகை அன்ஷிதா பதிலளித்துள்ளார்.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு நடிகை அன்ஷிதா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த வாரத்தில் சனிக்கிழமையான நேற்று ராணவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ளார். (மற்றொரு போட்டியாளராக மஞ்சரி வெளியேறுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன)

குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரமும் அன்ஷிதா, ஜெஃப்ரி வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து பேட்டி அளித்துள்ளனர்.

இதில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சற்றும் தாமதிக்காமல் பதிலளித்த அன்ஷிதா, ’வெற்றியாளர் யார் என்பது உலகத்துக்கே தெரியுமே, முத்துக்குமரன்’ எனக் கூறுகிறார்.

வெற்றியாளர் முத்துக்குமரன் என நீங்கள் முடிவு செய்தால் பிறகு ஏன் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாட்டை தொடர்ந்துகொண்டு இருந்தீர்கள், அப்போதே வெளியே வரவேண்டியதுதானே? என நெறியாளர் கேள்வி எழுப்புகிறார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!

இதேபோன்று விஷால் உடனான உறவு குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கோபமடைந்த அன்ஷிதா, எங்குச் சென்றாலும் விஷால், விஷால், விஷால்தானா? என தன் குரலை உயர்த்தி ரசிகர்களை நோக்கி ஆவேசமடைகிறார்.

இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டின் கடைசி போட்டியாளர், இப்போது முதலிடத்தில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT