விஜய் சேதுபதி படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!

விஜய் சேதுபதி தனது நண்பருடன் உரையாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கூடத்தில் விஜய் சேதுபதியின் நண்பர் கலந்துகொண்டார். அவரைக் கண்டதும் விஜய் சேதுபதி அவருடனும் குடும்பத்தாருடனும் உரையாடிய விதம் பலரைக் கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது நண்பருடன் உரையாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை நிறைவு செய்துள்ளது. வார இறுதி நாளான நேற்று (ஜன. 4) விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் உரையாடினார்.

நிகழ்ச்சியின்போது பார்வையாளர்களிடமும் நிகழ்ச்சி குறித்து அவ்வபோது கேள்விகள் கேட்பது வழக்கம். அந்தவகையில் பார்வையாளர்கள் பக்கம் திரும்பிக் பார்க்கும்போது, கூடத்தில் விஜய் சேதுபதியின் நண்பர் அமந்திருந்தார்.

அவரைக் கண்ட விஜய் சேதுபதி மிகவும் சகஜமாக சற்றும் யோசிக்காமல், ’டேய் மச்சான் நீ எங்கடா இங்க, ஒரு வார்த்தை கூட சொல்லாம’ வந்திருக்கிறாய் என்று கேட்டார்.

சக பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அவன் என் வகுப்புத் தோழன் என்று மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவரின் குடும்பம் குறித்தும் கேட்டறிந்தார். அவர்களிடம் மிகவும் நகைச்சுவையாக உரையாடிய விஜய் சேதுபதி, நிகழ்ச்சி முடிந்ததும் சந்திப்போம். உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பாருங்கள் எனக் கூறினார்.

மிகப்பெரிய நடிகராக உயர்ந்துவிட்ட பிறகும், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும்போது எதேர்ச்சையாக நண்பரைப் பார்த்த விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பள்ளி நண்பருடன் நெருக்கமாக உரையாடியது பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: இந்த வாரமும் 2 பேர் வெளியேற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT